Reading Time: < 1 minute

கனடாவின் ஹமில்டனில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இவ்வாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹமில்டனின் ஜெரோம் கிரசன்ட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டடத்தின் முதலாம் மாடியில் குறித்த நபர் சலமற்ற நிலையில் நாற்காலி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவரை, தீயணைப்புப் படையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.