Reading Time: < 1 minute

கனடாவின் ஹமில்டன் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் புகை மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் ஹமில்டன் கிழக்குப் பகுதியில் உள்ள 29 மான்ஸ் அவென்யூ (Mons Ave.) அருகே நண்பகல் நேரத்தில் நிகழ்ந்ததாக ஹமில்டன் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு படைவீரர்கள் வீட்டை சோதனையிட்ட போது, தீயில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண்ணை இரண்டாம் மாடியில் கண்டுபிடித்தனர்.

மேலும், அவசர சேவை குழுவினர் வருவதற்கு முன் உள்ளே செல்ல முயன்ற அயலவர் ஒருவர் புகைச் சுவாசம் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும், அப்போது வீட்டில் வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிற உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இன்று நிகழ்ந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு, ஹமில்டன் தீயணைப்பு துறையின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று தீயணைப்பு துறை தலைவர் டேவிட் கன்லிஃப் தெரிவித்தார்.

வீட்டு சேதத்துக்கான ஆரம்ப மதிப்பீடு சுமார் 500,000 டொலர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.