Reading Time: < 1 minute

டொரொண்டோவில் உள்ள ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவம் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் ஓர்டன் பார்க் சாலை அருகே இரவு 12:52 மணியளவில் நடைபெற்றது.

19 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவருக்கு உயிராபத்து இல்லை எனவும், காயமடைந்தவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.