Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

பிரிச்மவுன்ட் மற்றும் கம்ஸ்டாக் வீதிகளுக்கு அருகாமையில் நேற்று அதிகாலை வேளையில் இந்த துப்பாக்கி சுட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு எனினும் குறித்த சந்தேக நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.