Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மெர்க்லி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதன்போது படுகாயம் அடைந்த நிலையில் இருந்த பெண் அந்த ஸ்தலத்திலேயே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உயிரிழந்த பெண் மற்றும் சந்தேக நபர் தொடர்பான விவரங்களை எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை.