Reading Time: < 1 minute

ஸ்காபரோ றீஜென்ட் பார்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் பலியானதாகவும், மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

நேற்று இரவு பத்து மணியளவில், Middlefield Road மற்றும் McNicoll Avenue பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

குறித்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில், Sumach Street மற்றும் Dundas Street பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஆண் ஒருவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரொரன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை 311 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.