Reading Time: < 1 minute
Tamil Business Directory
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஒண்டாரியோவில் மூன்று இடங்களில் மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்படுகின்றது.
COVID 19 தொற்றின் பரவல் அதிகமாக உள்ள டொரோண்டோ (Toronto), பீல் (Peel) மற்றும் North Bay-Parry Sound ஆகிய இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுகின்றன.
March மாதம் 8ஆம் திகதிவரை இந்த நீட்டிப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க் (York) பிராந்தியத்தில் உள்ள கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் விலத்தப்படுகின்றது. நேற்று Ontario மாகாண அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது.
தற்போது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு அமுலில் உள்ள நான்கு இடங்களில் உள்ள முக்கிய பொது சுகாதார போக்குகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று மாகாண அரசாங்கம் இதனை அறிவித்தது.




