Reading Time: < 1 minute

கனடாவின் வான்கூவர் தீவில் அமைந்துள்ள ஓரிடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் வான்கூவர் தீவிலுள்ள Tofino என்னுமிடத்தில், நேற்று காலை 8.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 6.5ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம், கனடாவின் மேற்குக் கரையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வான்கூவர் தீவிலுள்ள Tofino மாவட்டத்திலிருந்து 130 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

சுமார் 2,000 மக்கள் வாழும் Tofinoவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க நிலவியல் ஆய்வமைப்பான USGS தெரிவித்துள்ளது.