Reading Time: < 1 minute
Tamil Business Directory
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




