Reading Time: < 1 minute

வாகனம் செலுத்த முடியாத வயோதிப பெண் ஒருவர் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

Tamil Business Directory

திடீரென உயிரிழந்த தனது மகனின் வாகன கடன் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

43 வயதான ஜேம் மில்வில் என்ற நபரே திடீரென உயிரிழந்தார்.

ஜேம்ஸ் கொள்வனவு செய்த வாகனத்தின் இணை உரிமையாளராக (co-signer) அவரது தாய் மாரியா மில்வில் இருந்துள்ளார்.

மகனின் திடீர் மறைவினால் மனமுடைந்து போன மாரியா, வாகனத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வங்கியிடம் கோரியுள்ளார்.

எனினும் வங்கி இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் வாகனத்தைச் செலுத்தாது அதற்கான கடன் தவணைக் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது என மாரியா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வாகனமொன்றின் இணை உரிமையாளராக கையொப்பமிடுபவர்கள் அந்த வாகனத்தின் கடன் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அது சட்ட ரீதியானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.