Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியா – வன்கூவர் தீவின் நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பெண் என்றும், ஆபத்தான நிலையில் இருவரில் ஒருவர் ஆண் என்றும் மற்றையவர் பெண் என்றும் பொலிஸார், தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து, டங்கனுக்கும் கோவிச்சன் ஏரிக்கும் இடையே நெடுஞ்சாலை 18 இல் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்கள் எதிரெதிர் திசையில் பயணித்தபோது, அதிவேகமாகப் பயணித்ததே, இவ்விபத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




