Reading Time: < 1 minute

கிறிஸ்மஸ் பண்டிகையன்று வன்கூவரில் ஆண் மற்றும் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, இருவரின் காணொளி மற்றும் ஒளிப்படங்களை வன்கூவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

மேலும், இவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ட்ரங்க் வீதி மற்றும் கனடா அவென்யூ அருகே இரவு 11 மணியளவில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபோது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்னொருவர் படுகாயங்களுடன் உயிராபத்தான நிலையில் இருந்தாகவும், பின்னர் அவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆணிற்கு 30 வயது எனவும், பெண்ணுக்கு 20 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.