Reading Time: < 1 minute

கனடாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் வான்கூவரிலுள்ள Columbia SkyTrain என்னும் ரயில் நிலையத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேரைத் தேடி வருகிறார்கள்.

நேற்று, செவ்வாய்க்கிழமை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் பேருந்து நிலையம் ஒன்றில் பேருந்தில் வைத்தே ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.