Reading Time: < 1 minute

றொரன்டோ ரீ.ரீ.சீ சேவை பஸ் ஒன்றில் மர்மமான பொருள் ஒன்றை பயணி மீது ஸ்ப்ரே செய்த பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

இனந்தெரியாத பொருள் ஒன்றை இவ்வாறு குறித்த பெண், பயணி ஒருவர் மீது ஸ்ப்ரே செய்துள்ளார்.

கடந்த வியாழ்க்கிழமை மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செப்பர்ட் அவன்யூ மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பெண் இவ்வாறு ஸ்ப்ரே செய்துள்ளார்.

இந்த மர்மப் பொருள் உடலில் பட்டதனால் எரிச்சல் ஏற்பட்டதாகவும் இது மிளகு ஸ்ப்ரேவிற்கு நிகரானது எனவும் பாதிக்கப்பட்ட பயணி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20 முதல் 30 வயது வரையிலான பெண் ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்து.

குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 416-808-4200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.