Reading Time: < 1 minute

றொரன்டோவில் பெண்களை தேவையில்லாமல் கேலி கிண்டல் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

றொரன்டோவின் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் செல்லும் இளம் பெண்களை மோசமாக கேலி செய்த காரணத்தினால் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

றொரன்டோவைச் சேர்ந்த ஈஸானுல்ல நிசாரீ என்ற 21 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான காலப் பகுதியில் நிசாரீ அடிக்கடி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேலி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் பற்றிய தகவல்கள் ஏதும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.