Reading Time: < 1 minute

ரொறன்ரோ நகர மேயர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

வேட்பாளர்களை சுட்டுக் கொலை செய்யப் போவதாக நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கைகளில் துப்பாக்கியுடன் இந்த அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக மேயர் வேட்பாளர்கள் முன்னெடுக்கவிருந்த விவாதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் காரணமாக முன்னணி வேட்பாளர்கள் பொது நிகழ்வுகளை பங்கேற்பதனை தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதான ஜூனிய பிரான்கோயிஸ் லாவேஜிஸ் என்ற நபரே இந்த அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட ஓர் மேயருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் பொதுவாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.