Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ரொறன்ரோ நகர மேயர் பதவிக்காக மொத்தமாக 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி ரொறன்ரோ மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேயர் பதவி வகித்து வந்த ஜோன் டோரி பதவியை ராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவ்வாறு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தற்போதைய முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
தற்போதைய கருத்துக் கணிப்பின் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலிவியோ ச்சோவ் முன்னிலை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




