Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ நகரில் சுமார் 43 ஆயிரம் டாலர் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை நபர் ஒருவர் களவாடி சென்றுள்ளார்.

Tamil Business Directory

ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்வது போன்று ஆபரண கடைக்குள் பிரவேசித்த குறித்த நபர் கடிகாரத்தை களவாடி சென்றுள்ளார்.

டொரன்டோவின் பே மற்றும் ப்ளூர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆபரண விற்பனையின் நிலையம் ஒன்றில் இவ்வாறு கைக்கடிகாரம் களவாடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடைக்குள் பிரவேசித்து கைகடிகாரத்தை அணிந்து பார்த்ததாகவும், பின்னர் அதற்காக பணத்தை செலுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

20 முதல் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்த குற்றச்செயலுடன் தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.