Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ரொறன்ரோ பெரும்பாக பகதியில் வீடுகளின் விலைகள் 3.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
வீடுகளை கொள்வனவு செய்வதற்கான போட்டித்தன்மை காரணமாக வீட்டு விற்பனை சராசரி விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கடந்த 2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் பதிவான பாரியளவிலான வீட்டு விலை அதிகரிப்பு தற்பொழுது குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




