Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தை மேற்கொண்டு தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். புட்வய்சர் ஸ்டேஸ் எனும் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 34 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விபத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

விபத்து மேற்கொண்ட போது சிறு காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலீட் பெட்ரிக் இட்ரிஸ் என்ற ரொறன்ரோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.