Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

வீதிகளில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் ஆண்டில் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை கட்டிட அதிகரிப்பு குறித்த யோசனையை முன் வைத்துள்ளது.

இதன்படி சுமார் 25 வீதத்தினால் வாகன தரிப்பு கட்டணங்களை அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது வீதிகளில் வாகனம் ஒன்றை தரித்து நிறுத்துவதற்காக மணித்தியாலம் ஒன்றிற்கு 1.5 முதல் 6.5 டொலர்கள் வரையில் அறவீடு செய்யப்படுகின்றது.

இந்த புதிய கட்டண அதிகரிப்பு அறிமுகம் செய்யப்பட்டால், வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பணவீக்கம் மற்றும் ஏனைய வட அமெரிக்கா நகரங்களில் காணப்படும் கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளை கருதிக் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.