Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வின் அடிப்படையில் ரயில் பயணிகள்மீது இரண்டு சிறுமியர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரொறன்ரோவின் சென்ட் கிளையர் ரயில் நிலைய பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ரயிலில் பயணித்த சிலர் குரோத உணர்வின் அடிப்படையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலையும் மேற்கொண்ட இருவரும் பதின்ம வயதுடைய சிறுமிகள் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 16 வயது மதிக்கத்தக்க கருப்பு மற்றும் பிரவுன் தோலுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு சிலரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் தங்களது உடலில் பச்சை குத்தி இருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.