Reading Time: < 1 minute

ரொறன்ரோவின், வெஸ்ரன் வீதி – லோறன்ஸ் அவெனியூ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டத்தின் லிஃப்ட் தளத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணைத் தாக்கிவிட்டு வெஸ்ரன் வீதியின் மேற்குப் பகுதியில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞனை பொலிஸார் தேடி வருவதோடு மேலதிக விசாரணையை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.