Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர் பொலிஸாருடன் சண்டையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன காரணத்தினால் குறித்த நபர் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.