Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவின் மருத்துவ உதவியாளர்கள் இவ்விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்கள் குறித்த அழைப்புகளின் போது துரித கதியில் அம்பியூலன்ஸ்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அதிக எண்ணிக்கையிலான அம்பியூலன்ஸ் வண்டிக்கான அழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




