Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் தனது மகளைக் கொன்றதாக 19 வயதான தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

நான்கு மாதங்களேயான சிசுவினை அந்த சிசுவின் தாய் கொலை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரொறன்ரோவில் வீடு ஒன்று தீபற்றிக் கொண்டது. எக்லிங்டன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

தீயணைப்புப் படையினர் 19 வயதான பெண்ணையும், அந்தப் பெண்ணின் நான்கு மாத சிசுவினையும் மீட்டிருந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும் சிசுவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்து விட்டது.

வீட்டுக்கு குறித்த பெண் தீ மூட்டியதாகவும், சிசுவை கொலை செய்துள்ளதாகவும் குறித்த 19 வயது பெண் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.