Reading Time: < 1 minute

வுட்பின் பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காக உயிரிழந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

அண்மையில் ரொறன்ரோவின் வுட்பின் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

குறித்த நபர் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கியூபக் மாகாணத்தை சேர்ந்த டாசியா மொபொன்கோ என்ற இளைஞரே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

ரொறன்ரோ பகுதியில் இந்த ஆண்டில் இதுவரையில் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு அல்லது மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.