Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்பு இது சரியான நேரம் அல்ல என, நகரின் உயர்நிலை மருத்துவர் ஈலின் டி வில்லா (Eileen De Villa) தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அத்துடன் ரொறன்ரோவில் திரிபடைந்த கொரோனா தொற்றாளர்கள் மேலும் பலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது, புதிய தொற்றுப் பரவலுக்கான அறிகுறியாக இருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரொறன்ரோ, பீல், யோர்க் பிராந்தியங்களில் வீட்டுக்குள் தங்கும் உத்தரவு வரும் 22ஆம் நாள் நீக்கப்படும் என ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.