Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

இவ்வாறு காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மூன்று ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் ஒருவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரிடம் இருந்து இரண்டு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.