Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் கர்ப்பிணி பெண் ஒருவரும் வயிற்றில் வளர்ந்த சிசுவும் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோ டவுன்டவுன் குயின் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

42 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் வீதியை கடக்க முயன்ற போது வாகனம் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

70 வயதான நபர் ஒருவர் செலுத்திய வாகனத்தில் குறித்த பெண் மோதுண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்றில் இருக்கும் சிசுவை உயிருடன் மீட்பதற்கு மருத்துவர்கள் கடின போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தினை மேற்கொண்ட சாரதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.