Reading Time: < 1 minute

ரொறன்ரோவின் ஃபோர்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

ஃபோர்ட் யார்க் பவுல்வர்ட் மற்றும் குயின்ஸ் வார்ஃப் வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் மூவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவசர மருத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாகவும், இதன் நோக்கம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.