Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாணம், ரொராண்டோ – கென்சிங்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil Business Directory

ஸ்பாடினா அவென்யூ மற்றும் நாசாவ் தெரு (Spadina Avenue and Nassau Street) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

தலையில் காயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலையாளிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ரொரண்டோ பொலிஸார், புலனாய்வாளர்கள் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறியுள்ளனர்.