Reading Time: < 1 minute

ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலரின் மரணம் தொடர்பாக, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோவைச் சேர்ந்த கில்ஹெர்ம் வில்லியம் வான் நியூடெஜெம் என்ற 34 வயதுடையவர் மீது கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

58 வயதான மொஹமட்-அஸ்லிம் ஜாபிஸ் கடந்த சனிக்கிழமை மாலை கிப்லிங் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வர்டு அருகே உள்ள பன்னாட்டு முஸ்லீம் அமைப்பு மசூதிக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தபோது குத்திக் கொல்லப்பட்டார்.

பொது சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க ஜாஃபிஸ் கட்டடத்தின் நுழைவைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான பதில்களை இல்லை. சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் கடந்த கால உறவும் இல்லை. எனினும் இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகுpன்றனர்.