Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டன்போர்த் மற்றும் டொனால்ட்ஸ் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் பயணம் செய்த போது போது குறித்த நபர் சக பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரும், பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபரும் ஒரே ரயில் நிலையத்தில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர் பற்றிய புகைப்படமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.