Reading Time: < 1 minute

யாழ் மத்திய பேருந்து நிலையமானது இன்று முதல் 24 மணிநேர சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.

Tamil Business Directory

நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதியே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட் கருத்துத் தெரிவிக்கையில் ” கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 24 மணிநேர பேருந்து சேவையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதற்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றதன் அடிப்டையில் குறித்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இதுவரை காலமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த பயணிகளுக்கு தற்போது அதற்கான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தமது பயணங்களைப் பயணிகளால் இலகுவாகவும் தடைகளின்றியும் மேற்கொள்ள முடிகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.