Reading Time: < 1 minute

யாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil Business Directory

யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் கட்டணமானி பொருத்தப்படாமையினால் மக்களிடம் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கடந்த இரண்டு மாத காலத்திற்கு முன்னரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலேயே பொலிஸார் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.