Reading Time: < 1 minute

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே அடையாளம் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.