Reading Time: < 1 minute
Tamil Business Directory
வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர்.
எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




