Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றியால் பகுதியில் ஈ-ஸ்கூட்டர் விபத்தில் பதின்ம வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

14 வயதான சிறுவன் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மொன்றியாலின் காட்டர்வில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்த நாளுக்காக பரிசாக கிடைத்த ஈ ஸ்கூட்டரை செலுத்திய போது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் செலுத்தி ஸ்கூட்டர் மோதி காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஈ-ஸ்கூட்டர் பயன்படுத்தும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.