Reading Time: < 1 minute

மொன்ரியல் தீ விபத்தில் சிக்கி சீனாவை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

சீனாவை சேர்ந்த 31 வயது An Wu என்ற நரம்பியல் விஞ்ஞானியே தற்போது மாயமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மொன்ரியல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் விஞ்ஞானி An Wu தங்கியிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு, An Wu கனடாவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. An Wu தொடர்பில் தாங்கள் அனைவரும் கலக்கமடைந்துள்ளதாகவும், தீ விபத்தில் சிக்காமல் அவர் தப்பிரித்திருக்கலாம் என்றே நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆனால் மேலும் 6 பேர் இந்த சம்பவம் தொடர்பில் மாயமானதாகவே கூறப்படுகிறது.

அதில் ஒருவர் விஞ்ஞானி An Wu என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பெண் ஒருவரின் சடலம் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஞாயிறன்று மீட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Wu தொடர்பில் உறுதியான தகவலுக்காக சீனாவில் அவரது குடும்பத்தினர் தூக்கத்தை தொலைத்து காத்திருப்பதாக கனேடிய நண்பர்கள் குழு தெரிவித்துள்ளனர்.