Reading Time: < 1 minute

கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின (Canada Day) பேரணி இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிகழ்கிறது.

தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர் வேலைநிறுத்தங்கள்” தான் இவ்வாண்டு நிகழ்வு நடைபெறாததற்கான முக்கிய காரணங்கள் என பேரணியின் பிரதான ஏற்பாட்டாளர் நிக்கோலஸ் கவுன் (Nicholas Cowen) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே பேரணி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், மொண்ட்ரியல் நகரம் அதனை மறுத்து, அவரிடமிருந்து எந்த அனுமதி கோரிக்கையும் பெறவில்லை என தெரிவித்தது.

1977இல் தொடங்கிய இந்த பேரணி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரணியைத் திட்டமிடுவதில் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிக தடைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.