Reading Time: < 1 minute

கனடாவில் மே மாத இறுதிக்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

Tamil Business Directory

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,344பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே 25ஆம் திகதி 3952பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு பதிவான மிக அதிகமான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 42ஆயிரத்து 087பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 678பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 12ஆயிரத்து 052பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 202பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து மூவாயிரத்து 357பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.