Reading Time: < 1 minute
Tamil Business Directory
பல பாடசாலைகள் ஏற்கனவே 2021ஆம் வகுப்புக்கான மெய்நிகர் பட்டமளிப்பு விழாக்களைத் திட்டமிட்டுள்ளன.
பெரும்பாலான உயர்நிலைப் பாடசாலை பட்டப்படிப்புகள் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சில பாடசாலை சபைகள், ஏற்கனவே ஜூன் மாதத்தில் நடைபெறும் சந்தர்ப்பத்தைக் குறிக்க ஒன்லைன் நிகழ்வுகளைப் பற்றி யோசித்து வருகின்றன.
ரொறொன்ரோ மாவட்ட பாசாலையின் செய்தித் தொடர்பாளர் ரியான் பேர்ட் கூறுகையில், பட்டமளிப்பு விழாக்கள் இந்த ஆண்டு மீண்டும் மெய்ந்நிகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என கூறினார்.
ஒன்றாரியோவின் சட்பரியில் ஒரு பாடசாலை சபை, ஏற்கனவே பெற்றோரிடம் வரவிருக்கும் பட்டப்படிப்புகள் மெய்நிகரில் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
மெய்நிகர் கொண்டாட்டங்களைத் திட்டமிடுவதாக பீல் மாவட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளது.




