Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினர், லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளனர்.
லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக கனடாவில் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுக்கு இவ்வாறு பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
கயில் முரே மற்றும் ஜெனிபர் ஸ்டுவர்ட் பிளைன் ஆகிய தம்பதியினரே இவ்வாறு பாரிய தொகை பணப்பரிசு வென்றெடுத்துள்ளனர்.
ஜெனிபர் அண்மையில் தங்களது குழந்தையை பிரசவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் காத்திருந்த கணவருக்கு லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டை கொள்வனவு செய்யுமாறு ஜெனிபர் குறுஞ்செய்தி மூலம் கோரியுள்ளார்.
மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க கயில் இவ்வாறு லொத்தர் சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.




