Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகாவில் நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த விபத்தில், வாகனம் மோதி நடந்து சென்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மாலை 7:10 மணியளவில் லேக்ஸோர் மற்றும் ஸ்டேவ்பேங்க் சந்திப்பு பகுதியில் விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்குத் திசையில் பயணித்த நீல நிற Chevy Trax வாகனம் சாலையின் நடுப்பகுதியில் கடந்து சென்ற பாதசாரியை மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தை ஓட்டியிருந்த ஆண் நபர் சம்பவ இடத்திலேயே தங்கி இருந்து போலீசாருடன் ஒத்துழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் அவர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பீல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.