Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டுன்டாஸ் மற்றும் வார்டொன் பகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் விசிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
இந்த சம்பவத்தொடரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.




