Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 147பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் 24ஆம் திகதிக்கு (2பேர்) பிறகு கனடாவில் பதிவான குறைந்தபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 31ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 947பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறாயிரத்து 487பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆயிரத்து 597பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 253பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.