Reading Time: < 1 minute
Tamil Business Directory
மானிடோபாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக மானிடோபா மாகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்துவந்த 80 வயதான ஒருவருக்கு புதிததாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சமீபத்திய பயணத்தின் மூலமே அனைவருக்கும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மாகாணம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மானிடோபா மேலும் இரண்டு கொரோனா வைரஸ் திரையிடல் மையங்களை – ஃபிளின் ஃப்ளோன் மற்றும் தி பாஸில் திறந்து வைப்பதாக அறிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.




