Reading Time: < 1 minute

கனடாவின் போவ்மன்வில்லில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி, போதைப்பொருள்கள் மற்றும் பணம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சோதனை அண்மையில் போவ்மன்வில் அவென்யூ மற்றும் ஹார்ட்வெல் அவென்யூ அருகிலுள்ள வீட்டில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி, பெருமளவு கொக்கைன் மற்றும் பென்டனில், அதனுடன் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளாரிங்டனில் வசிக்கும் 39 வயதான ஆண்ட்ரூ ராபின்சன், 38 வயதான டெரிக் க்ராஸி, 65 வயதான பேரி பியர்ஸ் மற்றும் ஸ்குகாக் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கெய்லா டொன்னிசன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனா்.