Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் பேருந்து ஒன்றில் புகுந்து இளைஞரை கத்தியால் தாக்கிய நபரை மூன்று மாதங்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோவில் Old Mill சுரங்க ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடர்புடைய கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.

16 வயது சிறுவன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் நுழைந்து, சம வயது சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளான். பல முறை கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டான்.

இதனிடையே, தாக்குதாரி சம்பவயிடத்தில் இருந்து மாயமாக, இரண்டு நாட்களுக்கு பின்னர் பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தொடர்புடைய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆயுதம் வைத்திருந்தல், தாக்குதல், பொதுவெளியில் ஆயுதம் பயன்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இளையோருக்கான சட்ட பாதுகாப்பின் அடிப்படையில், அவர் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிடவும் பொலிசார் மறுத்துள்ளனர்.